India
”கல்வித்துறையை அழித்து வரும் BJP,RSS” : ராகுல் காந்தி எம்.பி குற்றச்சாட்டு!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், UGC-NET,CUET தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கல்வித்துறையை பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்-ம் அழைத்து வருகிறது என ராகுல் காந்தி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ”ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா நாடுகளுக்கு இடையிலான போரினை தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக கூறும் மோடியால், ஏன் நீட் வினாத்தாள் கசிவை தடுத்து நிறுத்த முடியவில்லை. நீட் தேர்வு குளறுபடிகள் பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?.
UGC-NET,CUET தேர்வை ரத்து செய்துள்ள அரசு நீட் தேர்வை என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நீட் தேர்வில் ஊழல் மையங்களாக பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் திகழ்கிறது. நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு பரவியுள்ளது.
பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்-ம் கல்வித்துறையை முழுமையாக கைப்பற்றியதால்தான் நீட் மோசடிகள் நடைபெறுகிறது. இப்பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படும் , எந்த துணை வேந்தரும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட அமைப்பை (பா.ஜ.க) சார்ந்தவர்களா என்று பார்த்து தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் கல்வி அமைப்பே சீர்கெட்டுள்ளது. இந்தியாவின் கல்வி அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதமருக்கு தற்போது சபாநாயகர் யார் என்பதுதான் பிரச்சனை. நீட் உள்ளிட்ட தேர்வுகள் அவருக்கு பிரச்சனை இல்லை. பிரதமர் மன அழுத்தத்தில் உள்ளார். அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் அழுத்தம், மற்றொரு பக்கம் பா.ஜ.கவில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக அவரால் அரசு விவகாரங்களில் கவனம் செலுத்த முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!