இந்தியா

மாணவர்களை திணறடித்து வரும் மோடி அரசு : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!

UGC-NET,CUET தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் மோடி அரசு மாணவர்களை திணறடித்து வருகிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை திணறடித்து வரும் மோடி அரசு : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது. தற்போது நீட் தேர்வு தகுதி தேர்வு என்று கூறினார்கள். ஆனால் இப்போது நீட் தேர்வு வியாபாரமாக மாறிவிட்டது.

அண்மையில் நடந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கருணை மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு உள்ளதாக எழுந்த புகார்களை அடுத்து 1563 மாணவர்களுக்கு மறுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நீட் குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் UGC-NET,CUET தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும், மீண்டும் மக்களை மோடி அரசு திணறடித்து வருகிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், ”நீட் தேர்வின் மீதான சர்ச்சைகளே இன்னும் முடியாத நிலையில் தற்போது UGC -NET தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மோடி அரசின் இயலாமையால் மீண்டும் மீண்டும் மாணவர்களை திணறடிப்பதும், மக்களின் பொதுப் பணத்தை வீணடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories