India
நீட் தேர்வு முறைகேடு : 63 மாணவர்கள் தகுதி நீக்கம்... தேசிய தேர்வு முகமை அறிவிப்பு !
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 63 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை சார்பில் வெளியான அறிக்கையில் , நீட் தேர்வில் 63 பேர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இவர்களில் 23 பேர் பல்வேறு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆள் மாறட்டும் உள்ளிட்ட பல மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்களில் 12 பேர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் இரண்டு ஆண்டுகளுக்கும், 2 பேர் ஒரு ஆண்டுக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீட் மோசடி தொடர்பான புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!
-
“நீங்கள் Failed ஹீரோ, Failed முதலமைச்சர்” : விஜய் பேச்சுக்கு தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பதிலடி!
-
ஆய்வு, ஆராய்ச்சி என்ற பெயரால் படுகுழிக்கு பல்லாக்கு தூக்குவதா? : முரசொலி தலையங்கம் சாடல்!
-
“பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்... தரம் தாழ்ந்து பேசுவதா?”: சிஎம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!