India
”MP சீட்டுகளை கேட்டு தட்டேந்தி நிற்கும் அமித்ஷா” : ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியாகின. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது.
இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.
இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிகிறது. அந்த இரண்டு முதல்வர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். எனினும் அந்த இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளது.
இந்நிலையில், அரசியல் சாணக்கியன் MP சீட்டுகளுக்காக கையேந்தி நிற்கிறார் என காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "அரசியல் சாணக்கியராக கொண்டாடப்பட்ட அமித்ஷா, அவர் விரித்த வலையிலேயே இன்று சிக்கியிருக்கிறார். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் மக்களை ஏற்த்துக் கொண்டிருந்த அமித்ஷா, தற்போது எம்.பிக்களை கேட்டு தட்டேந்தி சுற்றிக் கொண்டிருக்கிறார்" என விமர்சித்துள்ளார்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !