India
குளத்தில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் : வீட்டில் இருந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம், திம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஜீவன் (13), சாத்விக் (11), விஷ்வா (12), பிருத்வி (12) ஆகியோர் பள்ளி விடுமுறை என்பதால் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். இதை கரையில் இருந்துபார்த்த ஒரு சிறுவன் அருகே இருந்த பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
பின்னர் இது குறித்து கிராம மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் குளத்தில் மூழ்கிய 4 சிறுவர்களையும் சடலமாக மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையில் குளத்தில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!