India
3 குழந்தைகள் உள்பட 5 பேரை கொடூரமாக கொன்ற தந்தை... தானும் தற்கொலை செய்துகொண்ட சோகம் - உ.பி-யில் ஷாக்!
உத்தர பிரதேச மாநிலத்தில் சீதாபூர் அருகே பலபூர் என்ற கிராமம் உள்ளது. இங்கே அனுராக் சிங் (45) என்பவர் தனது அம்மா, மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. எனவே வழக்கமாக இது தொடர்பாக குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது. மேலும் தனது குடும்பத்தினரை அனுராக், தாக்கி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று அனுராக் சிங் முழு போதையில் வந்துள்ளார். அப்போது தனது 65 வயது மிக்க தாயை, தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு 2 முறை சுட்டுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி சாவித்ரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து தனது மனைவி பிரியங்காவை (40) நோக்கி சென்ற அனுராக், அவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
தாய் மற்றும் மனைவியை கொலை செய்ததோடு இல்லாமல், தனது 12, 9, 6 வயதில் இருக்கும் 3 பிள்ளைகளையும் மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளார். இதையடுத்து தானும் தற்கொலை செய்துகொண்டார். அனுராக் வீட்டில் சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்ததன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது குடும்பத்தில் உள்ள 6 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனுராக்தான் தனது குடும்பத்தினர் 5 பேரை கொலை செய்து, பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் மது பழக்கத்திற்கு அடிமையான அனுராக்கை, அவரது குடும்பத்தினர் கண்டித்ததாகவும், போதை ஒழிப்பு மையத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரமே இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது. எனினும் அனுராக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுராக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!