India
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் 2 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் மே 13 - 4 ஆம் கட்டம், மே 20- 5 ஆம் கட்டம், மே 25 -6 ஆம் கட்டம் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி கடைசி கட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டதுபோலவே இம்முறையும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த 26 ஆம் தேதிதான் நிறைவடைந்தது. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. அமேதியில் கிஷோர் லால் சர்மா போட்டியிடுகிறார். ரேபரேலியில் 2004 முதல் 2019 வரை தொடர்ந்து 5 முறை சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சோனியா காந்தி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்துதான் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடுவார் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளில் ரேபரேலி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ராகுல்காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!