India
கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை : என்ன காரணம்? - முழு விவரம்!
கோட்டக் மஹிந்திரா வங்கி, ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022, 2023-ம் ஆண்டுக்கான கோட்டக் மஹிந்திரா வங்கியின் செயல்பாடுகள் குறித்து ரிசர்வ் வங்கி தொழில்நுட்பக் குழு ஆய்வு நடத்தியதாகவும், வணிக திட்டங்களின் மேலாண்மை, வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மேலாண்மை, தரவுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் குறைபாடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்வதற்காக அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கோட்டக் மஹிந்திரா வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மற்றும் செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும், கடன் அட்டைகள் வழங்குவதற்கும் தடை விதிக்கப்படுவதகாவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், கோட்டக் மஹிந்திரா வங்கி தனது பழைய வாடிக்கையாளர்கள் சேவை உள்ளிட்ட அன்றாட பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!