India
DD-யின் புதிய LOGO : காவிமயமான அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன்... எதிர்க்கட்சிகள் கண்டனம் !
இந்தியாவில் பழம்பெரும் தொலைக்காட்சியான அறியப்படுவது தூர்தர்ஷன் எனப்படும் DD. 1959-ல் நிறுவப்பட்ட இந்த தொலைக்காட்சிக்கு அப்போது ரசிகர்கள் ஏராளம். ஆரம்பத்தில் ஒரு மொழியில் மட்டுமே இருந்த இந்த தொலைக்காட்சியானது, பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி என பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டது.
தமிழில் இந்த தொலைக்காட்சி பொதிகை என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் வழக்கம்போல் பாஜக அனைத்திலும் தங்கள் இந்தி மொழி ஆதிக்கத்தை திணிப்பதுபோல், இதிலும் திணிக்க எண்ணி, கடந்த ஆண்டு பொதிகை என்ற பெயரை மாற்றி DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. எனினும் பெயரை மாற்றியது ஒன்றிய பாஜக அரசு.
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன், ஒன்றிய பாஜக அரசுக்கு ஆதரவாக பல்வேறு செய்திகளையும் கருத்துகளையும் மட்டுமே தெரிவித்து வந்தது. மேலும் பாஜக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதோடு, கட்சிக்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிட்டு வருகிறது. தூர்தர்ஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டங்கள் தெரிவித்து வருகிறது.
அண்மையில் கூட, பெரும் சர்ச்சைக்குரிய படமான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தேர்தல் சமயத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், அந்த படம் திரையிடப்பட்டது. இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் படத்தை ஒளிபரப்பு செய்த தூர்தர்ஷனுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் தாங்கள் பாஜக கூறுவதை தான் கேட்போம் என்று நிரூபிக்கும் வகையில், தங்கள் சேனலின் லோகோவை மாற்றியுள்ளது தூர்தர்ஷன் தொலைக்காட்சி. தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்தி தொலைக்காட்சியான DD News-ல் லோகோவின் நிறத்தை காவி நிறமாக மாற்றியுள்ளது. இதற்கு தற்போது நாடு முழுவதும் இருந்து வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது.
ஒரு அரசு சார்ந்த தொலைக்காட்சியை இப்படி காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!