India
5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை : கோவாவில் அதிர்ச்சி !
கோவாவில் 5 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் அவரின் பெற்றோர் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியபின்னர் அவர்கள் அந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.
கோவாவின் வட்டேம் பகுதியிலுள்ள கட்டுமான தளத்துக்குப் பின்னர் மயங்கிய நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் கண்டறிந்துள்ளனர். பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சிறுமியின் பிரேத அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து கட்டுமான தளத்தில் பணிபுரிந்த 20 தொழிலாளர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து இரு நாட்கள் ஆன நிலையில், இதுவரை குற்றவாளிகளை போலிஸார் கண்டுபிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். இந்த சம்பவம் கோவாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!