India
பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் : விதவிதமாய் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்தது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிகமாக ரூ.6060 நன்கொடை சென்றதும் உறுதியானது. மேலும் ED, IT,CBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க கட்சிக்கு சாதகமாக நன்கொடை பெற்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
அதேபோல் காலாவதியான தேர்தல் பத்திரங்களை கொண்டும் பா.ஜ.க நிதி பெற்றுள்ளது. இதற்காக ஒன்றிய அரசு சில விதிகளை மாற்றியுள்ளது. தற்போது புதிதாக தொடங்கப்பட்ட 20 நிறுவனங்கள் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.103 கோடிக்குத் தேர்தல் பத்திரங்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது.
அதாவது 1985 ஆம் ஆண்டு முதல், புதிதாகத் தொடங்கப்படும் ஒரு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடை கொடுக்கக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் இந்த விதியை பின்பற்றப்படாமல் புதிதாகத் தொடங்கப்பட்ட 20 நிறுவனங்கள் தங்களது லாபத்திலிருந்து 7.5% நன்கொடை வழங்கியுள்ளது. அப்பட்டமான சட்ட மீறலுடன் இது நடந்துள்ளது.
2017 ஆம் ஆண்டே தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தைப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் பண மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று ரிசர்வ் வங்கியும் கூறியிருந்தது. ஆனால் இதை எல்லாம் ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் தேர்தல் பத்திர திட்டத்தை தங்களது கட்சியாக பா.ஜ.க நிதிக்கு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது அப்பட்டமாகத் தெரிகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!