India
கிணற்றில் விழுந்த பூனை : காப்பாற்ற சென்று உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்... நடந்தது என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகரில் வகாட் என்ற கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று இருந்துள்ளது. தற்போது அந்த கிணற்றை யாரும் பயன்படுத்தாத நிலையில், கிணற்றில் பொதுமக்கள் குப்பைகளை போடும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த கிணற்றில் திடீரென ஒரு பூனை ஒன்று விழுந்து மேலே வர முடியாமல் கத்திக்கொண்டிருந்துள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த மானிக் என்பவர் பார்த்துள்ளார். பின்னர் அந்த பூனையை காப்பாற்றவேண்டும் என்று அவர் கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
ஆனால், கிணற்றில் இருந்த குப்பை மற்றும் சேரில் அவர் சிக்கிக்கொண்டதால் மேலே வரமுடியாமல் தவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்ற அவரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்துள்ளனர்.
ஆனால், அவர்களும் கிணற்றிலிருந்து வெளியேவராமல் சிக்கிக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணத்தில் சிக்கிய 6 பேரையும் மீட்கமுயற்சித்துள்ளனர்.
ஆனால், அதில் 5 பேர் கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியும், மூச்சி திணறியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்கமுடிந்தது. பூனையை காப்பாற்ற சென்று 5 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?