India
சூடு பிடிக்கும் பெங்களூரு குண்டு வெடிப்பு : பாஜக நிர்வாகியிடம் NIA அதிகாரிகள் தீவிர விசாரணை !
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி பிற்பகல் நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தென் மாநிலங்கள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொள்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தது.
இந்த சம்பவம் குறித்து அவரிடமும், மேலும் சில நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது பாஜக நிர்வாகியிடமும் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் திர்த்தஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் சாய் பிரசாத்.
பாஜக நிர்வாகியான இவர், பெங்களூரு வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்ட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். எனவே அதனடிப்படியில் NIA அதிகாரிகள் பாஜக நிர்வாகியான சாய் பிரசாத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தில் தமிழர்களுக்கு தொடர்பு உள்ளதாக பாஜகவை சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஷோபா (Shobha Karandlaje) ஆதாரமில்லாமல் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இவரது இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது குறித்து ஷோபாவிடமும் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
2 மாநிலங்களுக்குள் சண்டை மூட்டும் விதமாக பேசிய ஒன்றிய இணையமைச்சருக்கு எதிராக தொடர்ந்து எழுந்த நிலையில், அதன் எதிரொலியாக அவர் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!