India
’உங்களையும் கைது செய்வோம்’ : பா.ஜ.கவில் இணையும் படி மிரட்டல் - அதிஷி மர்லினா பரபரப்பு!
ஒன்றிய பா.ஜ.க அரசு தங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. மேலும் எதிர்க்கட்சி ஆட்சிகளையும் கவிழ்க்கச் சதித் திட்டங்களைத் தீட்டி வருகிறது.
அப்படி டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்ற நோக்கில்தான் மதுபான கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்து தொடர்ச்சியாக ஒருவருடத்திற்கு மேலாக சதித்திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதன் உச்சமாகத்தான் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில் மேலும் 4 ஆம் ஆத்மி அமைச்சர்களை கைது செய்ய ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிப்படையாகவே டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அப்போது பேசிய அமைச்சர் அதிஷி, "பா.ஜ.கவில் இணையும் படி தனக்குத் தூது வந்துள்ளது. அப்படி இல்லை என்றால் ஒரு மாதத்திற்குள் அமலாக்கத்துறை உங்கள் வீட்டிற்கு வரும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நான் உட்பட ராகவ் சதா, துர்கேஷ் பதக், சவுரப் பரத்வாஜ் ஆகிய நான்கு அமைச்சர்களையும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் சிறைக்குச் சென்றாலும் ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையுடன் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது. இதை உடைக்க ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
10 ஆண்டுகள் கழித்து.. UPSC டாப் 10-ல் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவர்கள் : தூத்துக்குடியில் உதயநிதி பேச்சு!
-
தூத்துக்குடியில் ரூ.178 கோடியில் மருத்துவமனைக் கட்டடங்கள், வகுப்பறைகள் திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
“விசுவாசத்துக்கு அடையாளம் OPS.. நிதிஷ்குமாரின் கதிதான் பழனிசாமிக்கும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி தொழிலாளர் ஓய்வு இல்லங்களை திறந்து வைத்த அமைச்சர் சி.வி.கணேசன்!
-
தமிழ்நாட்டின் வரலாற்றில் மருத்துவத்துறையில் காலிப் பணியிடங்கள் இல்லாத சூழல் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!