India
பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்... நண்பர்களே கூட்டாக செய்த கொடூரம் - அதிர்ந்துபோன பெற்றோர் !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 19 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் அருகில் இருக்கும் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த சூழலில் இவரது வகுப்பு ஆண் தோழர்கள் பார்ட்டிக்கு இவரை அழைத்துள்ளனர். இவரும் தனது வீட்டில் கூறிவிட்டு பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
ஆனால் விரைவில் வந்து விடுவதாக கூறிய அந்த பெண், நீண்ட நேரமாகியும் வரவில்லை என்பதால் பெற்றோர் அவரை தேடி அவரது ஆண் நண்பர் வீட்டுக்கு சென்றனர். அங்கே அந்த பெண் அரை போதையில் இருந்துள்ளார். தொடர்ந்து அவரது உடல்களில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாய் அறிந்த பெற்றோர் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர், இவர் கூட்டுப்பாலியல் தொல்லைக்கு உள்ளதாகவும், இவரது உடல்களில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனே இதுகுறித்து போலீசில் பகுமார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக ரதிந்திர நாயக் என்ற சுபோ (24), தாமோஜித் சர்தார் (19), சஞ்சய் ஹல்தர், திபோஜோதி துத்தா (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்களில் ஒருவருக்கு மட்டும் ஜாமின் கிடைத்துள்ளது. மற்ற 3 பெரும் வரும் 17-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வது முன்பே போட்ட திட்டமா? அல்லது போதையில் நடந்த விபரீதமா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பெண்ணை வன்கொடுமை செய்வது தொடர்பான வீடியோ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?