India
3 நாள் திருமண நிகழ்ச்சி... ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக செலவு செய்த அம்பானி : குவிந்த உலக பிரபலங்கள் !
மூன்று நாள் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிக்காக அம்பானி சுமார் 1000 கோடிக்கும் அதிக அளவு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், சில்லரை வர்த்தகம், தொலைதொடர்புத்துறை போன்று பல்வேறு துறைகளில் தனது இறக்கைகளை விரித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் உலகத்தின் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. அதன் குலம தலைவராக உள்ள முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரிய பணக்காரராகவும் திகழ்கிறார்.
அதிலும் ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அம்பானியின் தொழில் பல்வேறு இடங்களில் விரிவடையத்தொடங்கியது. அரசு துறைகளை செயலிழக்க செய்து அதன்மூலம் அம்பானி பல லட்சம் கோடிகளை வருவாயாக ஈட்டினார்.
சமீபத்தில், அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் மற்றொரு மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு தற்போது பிரபலங்களை அழைத்து திருமணத்துக்கு முந்தைய விழாவை, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோரை அம்பானி அழைத்த நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், மூன்று நாள் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சிக்காக அம்பானி சுமார் 1000 கோடிக்கும் அதிக அளவு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக பிரபல பாப் பாடகி ரிஹன்னாவுக்கு 70 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாகவும், மற்ற கலைஞர்களுக்கும் அவர்கள் கேட்டதை விட பல மடங்கு அதிகமாக சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நள்ளிரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்காக ஜாம் நகர் விமான நிலையம், பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்று நாள்கள் நடைபெறும் திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் மற்றும் விருந்துக்கு முகேஷ் அம்பானி ரூ.1,000 கோடி செலவு செய்வதாக அம்பானி குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!