India
சிறையிலேயே கர்ப்பமாகும் பெண் கைதிகள்... பிறந்த 196 குழந்தைகள்... - கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு !
நாடு முழுவதும் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதில் பெண்கள், ஆண்கள் என தனித்தனி சிறை உள்ளது. இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் சிறையில் இருக்கும் பெண்கள் திடீரென கர்ப்பம் தரிப்பதாக மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொட்ரப்பட்டுள்ளது. இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சிறைச்சாலைகள் உள்ளது. இங்கு இருக்கும் பெண் கைதிகள் திடீரென கர்ப்பம் தரித்து வரும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அரங்கேறி வந்துள்ளது. குறிப்பாக இதுவரை ஒட்டுமொத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 196 குழந்தைகள் பிறந்துள்ளது.
இந்த நிலையில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிறைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் சீர்திருத்த இல்லங்கள் தொடர்பான வழக்குகள் அண்மையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது நீதிமன்றத்தின் நண்பனாக கருதப்படும் அமிக்ஸ் கியூரி (Amicus curiae) சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “விசாரணைக்காக சிறையில் இருக்கும்போதே பெண் கைதிகள் கர்ப்பமாகின்றனர். இது ஒரு பகுதி மட்டுமல்லாமல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் அரங்கேறி வருகிறது. சுமார் 196 குழந்தைகள் சிறையிலேயே பிறந்து காவலில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பெண் கைதிகள் இருக்கும் சிறை பகுதிக்கு ஆண் சிறைச்சாலை ஊழியர்கள் செல்வதை தடை செய்யவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் அதிகாரிகள் சிறைச்சாலைக்கு சென்று ஆய்வு செய்தபோது, பல பெண் கைதிகள் குழந்தைகளோடு இருந்துள்ளனர். அதனை குறிப்பிட்டே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!