India

பெற்றோர்களே உஷார் - குழந்தையின் தொண்டையில் சிக்கிய 10 செ.மீ மீன் : நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதியின் கஞ்சேன ஹள்ளியை சேர்ந்தவர்கள் யோகேஷ் - ரோஜா தம்பதி. இவர்களுக்கு பிரதீக் என்ற 11 மாத ஆண் கை குழந்தை உள்ளது.

இந்நிலையில் இவர்களது வீட்டிலிருந்த மீன் தொட்டியிலிருந்து மீன் ஒன்றை எடுத்து பாட்டி, தனது பேரக் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துள்ளார்.

அப்போது குழந்தை பாட்டியின் கையை தட்டி மீனைப் பிடிக்கப் பார்த்தபோது, மீன் தவறி குழந்தையின் வாயில் விழுந்து தொண்டையில் சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.

உடனே பெற்றோர் குழந்தையை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷிவமொகாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்குப் பரிசோதித்தபோது குழந்தையின் தொண்டையில் இரண்டு மீன்கள் சிக்கி இருப்பது தெரியவந்தது. பிறகு உடனே சிறிய அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் தொண்டையிலிருந்த மீனை மருத்துவர்கள் அகற்றினர். இந்த சிக்சையை அடுத்து தற்போது குழந்தை நலமாக உள்ளது.

Also Read: "ரஷ்யா போர் தொடுத்தால் அதனை எதிர்கொள்ள தயார்" - போலந்து நாட்டின் அறிவிப்பால் பரபரப்பு!