India
வெள்ள நிவாரண நிதி குறித்து கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலு MP : விவாதத்தை திசை திருப்பிய பாஜக!
இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து உரையாற்றினார். அப்போது, "தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது வானிலை ஆய்வு மையம் உரிய முன்னெச்சரிக்கை தரவில்லை. இதனால் ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது" என டி.ஆர்.பாலு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது வேண்டும் என்றே ஒன்றிய இணையமைச்சர்கள் நித்யானந்த் ராய், எல்.முருகன் ஆகியோர் குறுக்கீடு செய்தனர். அதற்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவையில் அமளி ஏற்பட்டது. ஆனால் வெள்ள நிவாரணம் தொடர்பாக ஒன்றிய அரசு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
இதையடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்தும், அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததை கண்டித்தும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!