India
18+ படம் பார்த்ததால் ஆத்திரம்: பள்ளி செல்லும் மகனை கொன்ற கொடூர தந்தை -காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம்!
மகாராஷ்டிரா மாநிலம் சோலப்பூர் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கீர்த்தி என்ற மனைவி இருக்கும் நிலையில், 14 வயதில் விஷால் என்ற மகனும் உள்ளார். தையல் வேலை செய்து வரும் விஜய், தனது மகன் விஷாலை அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
இந்த சூழலில் கடந்த ஜன 13-ம் தேதி சிறுவன் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரித்து தேடி வந்த நிலையில், சிறுவன் அவரது வீட்டின் அருகிலேயே சடலமாக கிடந்துள்ளார். பின்னர் சிறுவனின் உடலை மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். உடற்கூறாய்வு முடிவில் சிறுவனின் உடலில் சோடியம் - நைட்ரேட் என்ற விஷம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்ததில் சிறுவனின் தந்தை விஜய், தனது வாக்குமூலத்தை முன்னுக்கு பின் முரணாக கூறியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான் கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார்.
அதாவது இறந்துபோன விஷால் (14) அடிக்கடி 18+ படம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து தந்தையிடம் பள்ளி நிர்வாகமும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதோடு பள்ளி சிறுமிகளை கிண்டலும் அடித்து வந்துள்ளார். நாளடைவில் 18+ படத்தை பார்க்க மட்டுமே அதிக நேரத்தை செலவழித்தும் வந்துள்ளார். இதனை அவர் பலமுறை கண்டித்தும் சிறுவன் கேட்கவில்லை. இதனால் சம்பவத்தன்று சிறுவனை பள்ளிக்கு அழைத்து செல்லும் வழியில் ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அதில் விஷத்தை கலந்தும் கொடுத்துள்ளார்.
அந்த ஜூஸை குடித்து மயக்கமடைந்த சிறுவனை அருகில் இருக்கும் கால்வாயில் தூக்கி வீசியுள்ளார். இவையனைத்தும் தந்தை விஜய் போலீசில் வாக்குமூலமாக அளித்துள்ளார். தற்போது விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !