India
Make Up மாமியார் பயன்படுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதம் - கைகலப்பாக மாறிய நிலையில் விவாகரத்து கோரும் மனைவி!
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது மால்புரா என்ற பகுதி. இங்கு வசிக்கும் குடும்பம் 2 சகோதரர்களுக்கு பெண் தேடி வந்தனர். இந்த சூழலில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் 2 சகோதரிகள், இந்த சகோதரர்களை திருமணம் செய்து, அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், அவ்வப்போது மாமியார் மருமகள் சண்டை அரங்கேறி வந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மேக் அப் பொருட்களை மாமியார் பயன்படுத்தி வந்தது மருமகள் கண்டறிந்துள்ளார். இதுகுறித்து ஆரம்பத்தில் கேட்காமல் இருந்த போதிலும், வீட்டிலேயே இருக்கும்போதும், மாமியார் மருமகளின் மேக் அப் பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண், இதுகுறித்து மாமியாரிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தை தொடர்ந்து, தனது மகனிடம் மருமகள் குறித்தும், சண்டை குறித்தும் கூறியுள்ளார் மாமியார். இதையடுத்து கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, தனது மனைவி மற்றும் சகோதரியை குடும்பத்தோடு வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சகோதரிகள் இருவரும், தனது தாய் மாமா வீட்டில் தங்கி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இருவரையும் மாமியார் வீட்டில் இருந்து அழைக்காத நிலையில், மனைவி விவகாரத்து கோரியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து கவுன்சிலிங் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மனைவி விவகாரத்து கோரிய தனது முடிவில் இருந்து பின்வாங்காமல் இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹனி மூனுக்கு கோவா அழைத்து செல்வதாக கூறி, குடும்பத்தோடு மனைவியையும் சேர்த்து அயோத்தி இராமர் கோயிலுக்கு அழைத்து சென்ற கணவரிடம் இருந்து, மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் பெரும் பேசுபொருளான நிலையில், தற்போது மேக் அப் பொருளுக்காக ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி விவாகரத்து கோரியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!