India
”சமூக அழுத்தங்களில் இருந்து நீதிபதிகள் விடுபட வேண்டும்” : தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் பேச்சு!
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற கலையரங்கில் உச்சநீதிமன்றத்தின் வைர விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் , டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.O மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய வலைதளம் உள்ளிட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட், "வழக்கறிஞர் தொழிலில் ஆண்கள் அதிகளவில் இருந்தனர். இதில் குறைவான பிரதிநிதித்துவம் பெற்றிருந்த பெண்கள், தற்போது மாவட்ட நீதித்துறையில் 36 % உள்ளனர்.
வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளில் பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. மக்கள்தொகையின் பலதரப்பட்ட பிரிவினரும் சட்டத் தொழிலில் சேர வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகள், ஒத்திவைப்பு கலாசாரம், நீண்ட கால விடுமுறைகள் போன்ற சிக்கல்களை நீதித்துறை சந்திக்கிறது.
சுதந்திரமான நீதித்துறை என்பது நிறைவேற்றும் அதிகாரம் மற்றும் சட்டமன்றத்தில் இருந்து பிரிப்பது மட்டுமல்ல. நீதிபதிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சுதந்திரமாக இருப்பதும் இதில் அடங்கும். சமூகம் மற்றும் அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதிபதிகள் விடுபட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!