India
மகனை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை : பெங்களூருவை அதிரவைத்த சம்பவம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையத்தில் வசித்து வருபவர் நர்தன் போப்பன்னா. இவரது தாய் உடல்நலம் சரியில்லாததால் வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருகிறார். தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் தினமும் குடித்து விட்டு மனைவியின் மருத்துவ சிகிச்சையை கூட கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தந்தை மகனுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மதுவாங்குவதற்காக மகனிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு பணம் தரமுடியாது என தந்தையிடம் மகன் கூறியுள்ளார்.இதையடுத்து தந்தை மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையை நர்தன் போப்பன்னா ஒரு அறையில் அடைத்து பூட்டியுள்ளார். பின்னர் கூச்சலிட்டுக் கொண்டிருந்த தந்தையின் சத்தம் அமைதியானதை அடுத்து இவர் வீட்டின் ஹாலில் அமர்ந்துள்ளார்.
ஆனால் அறைக்குள் இருந்த அவரது தந்தை அங்கிருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து கதவில் சுட்டுள்ளார். இதில் குண்டு கதவை துளைத்துக்கொண்டு வெளியே அமர்ந்திருந்த நர்தன் போபன்னா தொடையில் பாய்ந்துள்ளது.
இதில் ரத்தவெள்ளத்தில் துடித்த அவர் இதுகுறித்து தனது சகோதரிக்கு போன்செய்து கூறியுள்ளார். பின்னர் சகோதரி அருகே உள்ள உறவினருக்கு இந்த சம்பவத்தை தெரிவித்து வீட்டிற்கு சென்று பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளனார். ஆனால் இவர்கள் வருவதற்குள் ரத்தம் அதிகம் வெளியே சம்பவ இடத்திலேயே நர்தன் போப்பன்னா உயிரிழந்து சடலமாக இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து நர்தன் போப்பன்னாவின் தந்தை சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பெற்ற மகனையே தந்தை சுட்டுக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!