India
சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை - AIIMS அதிகாரி இடை நீக்கம் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மன உளைச்சலுக்கு ஆளான மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
பிறகு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவி எய்ம்ஸ் நிர்வாகி அதிகாரியைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இப்புகாரை அடுத்து நிர்வாக அதிகாரி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எய்ம்ஸ் வளாகத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த பாலியல் புகாரை விசாரிக்க 9 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!