India
”திட்டத்திற்கு இந்தியில் பெயர் வைத்தால்தான் நிதி”.. கேரள அரசை பழி வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்தி மொழி பேசாத மாநிலங்களில் எப்படியாவது இந்தியை திணித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியிலேயே அரசு சார்பான கடிதங்களை அனுப்பி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தால் அப்போது மட்டும் அமைதியாக இருந்து விட்டு பிறகு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். அதேபோல் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களின் பெயர்களும் இந்தியிலேயே வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திட்டத்தின் பெயர் இந்தியில் வைக்க மறுத்ததால் ஒன்றிய அரசு நிதியை நிறுத்திவிட்டதாகக் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வீணா ஜார்ஜ், "கேரளாவில் உள்ள தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தியது.
இந்தியில் பெயர் மாற்றினால் கேரளாவில் உள்ள கிராமப்புற மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே இந்தியில் பெயர் மாற்றம் செய்ய முடியாது என மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து ஒன்றிய அரசு இந்தியில் பெயர் மாற்றம் செய்ய மறுத்ததால் அந்த திட்டத்திற்கான நிதியை வெளியிட மறுத்துவிட்டது.
இந்த திட்டத்திற்காகக் கட்டப்பட்ட மையங்களில் பெயர் பலகையில் ஒன்றிய அரசு வழங்கிய ஆறு சின்னங்களைச் சேர்த்தோம். ஆனால் தற்போது இந்தியில் பெயர் மாற்றினால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. இதனால் இந்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஒன்றிய அரசின் ஒதுக்கீடான ரூ.826 கோடியில் ஒரு தவணையைக் கூட ஒன்றிய அரசு மாநிலத்திற்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!