India
ஜெயிலுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டீ, பக்கோடா ட்ரீட் வைத்த கொலை விசாரணை கைதி - பஞ்சாபில் பரபர !
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது லூதியானா என்ற பகுதி. இங்கிருக்கும் சிறையில் பல்வேறு கைதிகள் உள்ளனர். இந்த சூழலில் இந்த கைதிகளில் பலரும் சக சிறை கைதியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்களுக்கு டீ பார்டியும் வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 21-ம் தேதி எடுக்கப்பட்ட இந்த வீடியோவானது, அதே சிறையில் இருக்கும் கைதிகளின் மொபைகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் இருக்கும் மணி என்ற விசாரணை கைதி இருக்கிறார். இவரது பிறந்தநாள்தான் அண்மையில் வந்தது. சிறையில் இருந்தாலும் தனது பிறந்தநாள் கொண்டாட எண்ணிய இவர், சிறை கைதிகளுக்கு டீ, பக்கோடா உள்ளிட்டவையை ஏற்பாடு செய்துள்ளார்.
பிறகு அனைவருக்கும் அது பரிமாறப்பட்ட நிலையில், அதனை அனைவரும் சாப்பிட்டுக்கொண்டே 'மணி அண்ணாவுக்கு இன்று பிறந்தநாள்...' என்று சந்தோஷமாக கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக வீடியோவும் எடுக்கப்பட்ட நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு சக கைதிகள் உட்பட பலரும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் அந்த வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த வீடியோ எடுக்கப்பட்ட செல்போனை அதிகாரிகள் மீட்ட நிலையில், அது ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்ததால் அதிலிருக்கும் டேட்டாக்களை எடுக்கமுடியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து FIR பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறையில் செல்போன்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் செல்போன் ஜாமர்கள் விரைவில் பொறுத்தப்படுவதற்கு உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!