India
பணி நீக்கம் செய்யப்பட்ட திருநங்கை : விளக்கம் அளிக்க பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியை சேர்ந்தவர் ஜேன் கௌஷிக் (31). திருநங்கையான இவர், ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளார். இந்த சூழலில் அம்மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக வேலை கேட்டு விண்ணப்பித்து வந்துள்ளார். ஆனால் இவரது பாலினத்தை காரணம் காட்டி பல பள்ளிகளில் இவர் நிராகரிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு உமாதேவி அகாடமி என்ற பள்ளியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அங்கே அவரை வேலைக்கு எடுத்துக்கொண்டனர். ஆனால் அவர் அவருடைய திருநங்கை என்ற அடையாளத்தை மறைக்க வேண்டும் என்று நிர்வாகம் கூறியிருந்தது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து அங்கே பணிக்கு சேர்ந்தார்.
அந்த பள்ளியில் ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியராக இவர் பணிக்கு சேர்ந்த பிறகு சில நாட்கள் நன்றாக சென்றுகொண்டிருந்தது. ஆனால் ஒரு நாள் பள்ளி தலைமை அவரை அழைத்து, உங்களுடைய திருநங்கை அடையாளம் இங்கிருக்கும் ஆசிரியர் மாணவர்களுக்கு தெரிந்து என்றும், எனவே பள்ளியை விட்டு நீங்களே சென்று விடுமாறும் கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு அதிர்ந்த அவரும் சமாதான படுத்த முயன்றுள்ளார். ஆனால் வேறு வழியின்றி பணியில் இருந்து வலுக்கட்டாயம் படுத்தப்பட்டு விலகி கொண்டார். இதைத்தொடர்ந்து மற்ற பள்ளிகளில் முயன்று வந்தார். ஆனால் ஒவ்வொரு இடங்களிலும் இவரது பாலினத்தை காரணம் காட்டியே பள்ளிகளில் இருந்து நிராகரிக்கப்பட்டார்.
இருப்பினும் முயற்சியை விடாத இவர், குஜராத்தில் மற்றொரு பள்ளியில் விண்ணப்பித்து பணியில் சேர்ந்த பிறகு, அங்கேயும் பாலினத்தை குறிப்பிட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் விரக்தியடைந்த திருநங்கை ஜேன், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!