India
சிறுமியை வன்கொடுமை செய்த பா.ஜ.க நிர்வாகி : உத்தரகாண்ட மாநிலத்தில் நிகழ்ந்த கொடூரம்!
உத்தரகாண்ட மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் ராவத். இவர் பா.ஜ.க கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்தாக கமல் ராவத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தான் பா.ஜ.க நிர்வாகி கமல் ராவத் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் சட்டமன்றத் தொகுதியில் நடந்துள்ளது.
இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொண்ட கமல் ராவத் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து போலிஸார் தேடிவருகின்றனர். சிறுமியின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்க்கட்சிகள் உடனே தலைமறைவாக உள்ள கமல் ராவத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். பா.ஜ.க நிர்வாகி ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கல்வி எனும் ஆயுதத்தால் மேலெழுந்த அறிவுச்சூரியன் அம்பேத்கர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திருப்பரங்குன்றத்தைக் கலவரப் பூமியாக மாற்றியது பா.ஜ.க. கும்பல்!” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!