India
”RSS,BJP-யை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்" : காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவில் ராகுல் பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் 139ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும் வெற்றி பெறும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டுதல் படி இந்தியாவைச் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்குக் கொண்டு செல்கிறது ஒன்றிய பா.ஜ.க அரச. நாட்டின் மக்கள் தொகையில் 50% ஓபிசி, 15% தலித்துகள், 12% பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!