India
நைட் கிளப்பில் தகராறு : இளம்பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபர் - CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராகபணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் ராஜ் குமார் ஜஜாரியா என்பவரோடு நேற்று முன்தினம் இரவு நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார்.
அதே கிளப்க்கு மங்கேஷ் அரோரா என்ற தொழிலதிபர் தனது காதலியான ரிக்கி என்பவரோடு வந்துள்ளார். அங்கு அவர்கள் இருந்தபோது மங்கேஷ் அரோரா உமா சுதரை நோக்கி ஆபாசமாக வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த உமா சுதர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் மங்கேஷ் அரோராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடருக்கு இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன் பின்னர் கிளப் ஊழியர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர்.
வெளியே வந்தும் வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், மங்கேஷ் அரோரா தனது காதலியுடன் தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார். அப்போது அவர்கள் காருக்கு முன்சென்று ராஜ் குமார் மற்றும் உமா சுதர் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
அப்போது காரை நிறுத்தாமல் மங்கேஷ் அரோரா அவர்கள் மேல் காரை ஏற்றியுள்ளார். இதில் உமா சுதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜ் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் மங்கேஷ் அரோராவை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!