India
17 வயது சிறுவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
டெல்லியில் உள்ள சத்புலா பூங்காவில் வழக்கம்போல் நேற்று காலை பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சிறுவன் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து விசாரணை செய்தபோது சடலமாக இருந்த சிறுவன் விவேக் என தெரியவந்தது.
மேலும் , 17 வயதாகும் விவேக் இந்திரா முகாம் பகுதியைச் சேர்ந்தவர். இவரை அவரது நண்பர் ஒருவர் குடிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். பிறகு இருவரும் மதுகுடித்து விட்டு சத்புலா பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பதுங்கி இருந்த 5 பேர் திடீரென விவேக்கை சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்த மூன்று பேரை போலிஸார் கைது செய்தனர். விவேக்கை கொலை செய்த நண்பர்களுக்கு இவருக்கும் ஏற்கனவே சண்டை இருந்துள்ளது. இதனால் விவேக்கை கொலை செய்ய திட்டம்போட்டு அழைத்து வந்து கொலை செய்ததாகக் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” : கலைஞர் பாணியில் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாணவி தற்கொலை வழக்கு : அம்பலமான பா.ஜ.க.வின் கலவர அரசியல் - முரசொலி!
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!