India
ராகி உருண்டையில் சயனைடு : மாரடைப்பால் மனைவி இறந்ததாக நாடகமாடிய கணவர்.. விசாரணையில் பகீர் !
கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது சிக்கமகளூரு என்ற பகுதியில் அமைந்துள்ளது தேவவ்ருந்தா என்ற கிராமம். இங்கு தர்ஷன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற இளம்பெண்ணும் கல்லூரி படித்த காலத்திலே காதலித்து வந்துள்ளனர். இவர்களது 3 வருட காதல் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன் மனைவிக்குள் வழக்கமாக ஏற்படும் சண்டை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று தனது மனைவி ஸ்வேதா தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் தர்ஷன். இதனைக்கேட்டு பதறி ஓடி வந்த குடும்பத்தினர், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது மனைவி ஒரு ஊசி மூலம் விஷத்தை சுயமாக செலுத்தி தற்கொலை செயய்ய முயன்றதாகவும், அந்த சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் கண்ணீரோடு தெரிவித்தார்.
தொடர்ந்து விசாரிக்கையில், ஸ்வேதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து கணவரிடம் விசாரிக்கையில், தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாகவும், அது தனது மனைவிக்கு தெரியவந்து, அவர் அந்த பெண்ணுக்கு போன் போட்டு கண்டித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இதன் காரணமாக தனது மனைவியை கொலை செய்ய எண்ணியதாக தெரிவித்த தர்ஷன், அதற்காக அவருக்கு ராகி உருண்டையில் சைனயிடு கலந்து கொடுத்ததாகவும், இதனை தற்கொலை வழக்காக மாற்ற முயற்சித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கணவர் தர்ஷனை போலீசார் கைது செய்த்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!