India

”நாடாளுமன்றத்திலேயே உண்மையை மறைக்கும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்” : பினராயி விஜயன் குற்றச்சாட்டு!

ஒன்றிய அரசு இந்திய நாட்டை தவறாக வழி நடத்துகிறது என்றும், மாநிலத்திற்கு 100% ஜிஎஸ்டியும், 50% ஐஜிஎஸ்டி (ஒருங்கிணைந்த சரக்கு விற்பனை வரி)யும் கிடைக்கும் என்று மாநிலங்க ளவையில் ஒன்றிய நிதி அமைச்சர் கூறினார். இது தவறான புரிதலை பரப்புவதற்காக திட்டமிட்டு சொல்லப் பட்ட அரசியல் அறிக்கை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளமாநிலம் பெரும்பாவூர் தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் பினராயி விஜயன்" ஜிஎஸ்டியின் ஒரு பகுதியாக வருவாயில் 50% மாநிலங்களின் வரி வருவாயாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்கள் 44% வரி உரிமைகளை இழந்தன. ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வதாக ஒன்றிய அரசு தெரி வித்தது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது முடிவுக்கு வந்தது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ஒன்றிய அரசின் நிதியில் இருந்து வழங்கப் படுவதில்லை. மாறாக, தனி செஸ் விதிப்பதன் மூலம் மாநிலத்திடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.

இழப்பீட்டின் மீதான செஸ் வரியை ஒன்றிய அரசு இன்னும் வசூலித்து வருகிறது. ஜிஎஸ்டிக்கு முன்பும் அதன் அமலாக்கத்தின் போதும் வருவாய் நடுநிலை விகிதம் 16 சதவிகிதமாக இருந்தது. இப்போது அது 11 சதவிகிதமாக உள்ளது. 35-45 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள், ஜிஎஸ்டி வந்ததும் 28 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மக்க ளவைத் தேர்தல் வந்ததும் மீண்டும் வரி குறைக்கப்பட்டது. இப்போது அது 18 சதவிகிதமாக உள்ளது. வரி குறைப்பால் இந்த பொருட்களின் விலை குறையவில்லை. மக்க ளுக்கு பலன் கிடைக்காதது மட்டு மின்றி, மாநிலங்களின் வரி வருவா யிலும் பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஜிஎஸ்டி பங்கை நிர்ணயிப்பதில் தெளிவின்மை உள்ளது. ஒன்றிய - மாநில நிதி பரிமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. வெளிப்படைத்தன்மைக்கு, ஜிஎஸ்டி மூலம் வசூலிக்கப்படும் தொகையை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றிய அரசு அதிக அளவில் செலவழிப்பதாகக் கூறப் படுகிறது. 15 ஆவது நிதி ஆயோக் அறிக்கையின்படி, மொத்த செல வில் 62.4 சதவிகிதம் மாநிலங்க ளால் ஏற்கப்படுகிறது. ஆனால், 62.2 சதவிகிதம் வருவாய் ஒன்றிய அரசுக்கு செல்கிறது. இந்த உண்மையை ஒன்றிய நிதி அமைச்சர் மறைத்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது” : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP வலியுறுத்தல்!