India
தடகள பயிற்சிக்கு சென்ற 15 வயது சிறுமி : கடத்தி, போதை மருந்து கொடுத்து வன்கொடுமை செய்த 4 பேர் கும்பல் !
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மம்தாட் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமம் ஒன்றில் 15 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர் பக்கத்து நகரம் ஒன்றுக்கு தினசரி செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல அந்த சிறுமி சென்றுள்ளார். தனது கிராமத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில், அவரது கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் சிறுமியை வழி மறுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியை மிரட்டி அவருக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்தைக் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்ததும் அவரை அங்கிருந்து ஆள் இல்லாத இடத்துக்கு அந்த கும்பல் தூக்கி சென்றுள்ளது.
பின்னர் அங்கு வைத்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் நினைவு திரும்பியதும் காவல்நிலையத்துக்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லுவ்பிரீத் சிங், பம்மா சிங், ஜஸ்பிரீத் சிங், குர்மீத் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!