India
10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்கள் : முதல் முறையாக வெளியான பதறவைக்கும் வீடியோ !
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இங்கு கடந்த 12-ந் தேதி சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்ற போது சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில், சுரங்கத்துக்குள், 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாக பேரிடர் மீட்பு பணியினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் 6 அங்குல குழாய் அமைத்து, 10 நாட்களாக தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள், குடிநீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சுரங்க பாதையில் சிக்கிய 41 பேர் குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. உணவு பொருட்கள் அனுப்பப்படும் பாதை வழியே வாக்கி டாக்கி அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் மீட்பு படையினர் அவர்களுடன் பேசி வருகின்றனர்.
அதோடு எண்டோஸ்கோபி கேமராவை அனுப்பி அதன் மூலம் உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் குறித்து வீடியோ காட்சியும் இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், விரைவில் மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், உள்ளே இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச உதவும் வகையில், செல்போன்களை அனுப்ப மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது அந்த தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் என்பதற்கு அறிகுறி என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!