India
வீட்டில் துர்நாற்றம் - கதவை திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி : விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்குட்பட்ட கர்தா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்குடியிருப்பில் இருந்தவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் 4 பேரின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் குறித்து விசாரித்தபோது இறந்தவர்கள் பிருந்தாபன் கர்மாகர், அவரது மனைவி தேபஸ்ரீ, இந்த தம்பதியின் மகள் டெபலீனா, மகன் உத்சாஹா ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் போலிஸார் அந்த வீட்டை ஆய்வு செய்தபோது இறப்பதற்கு முன்பாக பிருந்தாபன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இதில் , "தனது மனைவி வேறு ஒருவருடன் பழகிவந்துள்ளார். இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் குழந்தைகளுக்கும், மனைவிக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டதாக" இருந்ததாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !