India
பல் வலியால் அவதிப்பட்ட சிறுமி.. X-RAY எடுக்க சொன்ன மருத்துவர்.. பாலியல் தொல்லை கொடுத்த லேப் டெக்னீஷியன் !
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக பல் வலி இருந்துள்ளது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் மருத்துவரிடம் கூட்டி சென்றுள்ளனர். அங்கே சோதனை செய்த மருத்துவர், பல்லுக்கு X-RAY எடுத்து வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி சிறுமிக்கு X-RAY எடுப்பதற்காக மேற்கு முலுண்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு சென்டருக்கு சிறுமியை அவரது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கே சிறிது நேரம் காத்திருந்த சிறுமி, X-RAY எடுப்பதற்காக உள்ளே சென்றுள்ளார். அங்கே சிறுமிக்கு சுராஜ் ஷிண்டே என்ற லேப் டெக்னீஷியன் ஒருவர் X-RAY எடுக்க முயன்றுள்ளார். அப்போது சிறுமியை தகாத இடங்களில் தொட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிறுமியிடம் அவர் அவ்வாறு செயலில் ஈடுபட்டதால், சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து பதறியடித்து உள்ளே வந்து பார்த்த பெற்றோரிடம், சிறுமி நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து சிறுமியை அழைத்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட லேப் டெக்னீஷியன் சுராஜ் ஷிண்டேவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல் வலி காரணமாக X-RAY எடுக்க சென்ற சிறுமிக்கு, அங்கிருந்த லேப் டெக்னீஷியன் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!
-
“டிட்வா புயலையொட்டி சென்னையில் 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்!” : சென்னை மாநகராட்சி தகவல்!