India
“இவர்கள் தான் காரணம்..” - ஆசிரமத்தில் தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள்.. உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள ஆக்ராவில் பிரஜபதி பிரம்மா குமரிஸ் (Prajapati Brahma Kumaris ashram) என்ற ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் என அதிகமானோர் வசிக்கின்றனர். ஆன்மீக பயணத்தில் மூழ்கிய சிலர் இங்கே வந்து இறுகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி, அங்கே தஃனை வித்துள்ளனர் இந்த ஆசிரமத்தின் நிர்வாகிகள்.
இந்த சூழலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஏக்தா (38), ஷிகா (32) என்ற 2 சகோதரிகள் தங்கள் குடும்பத்தை விட்டு இந்த ஆசிரமத்தில் வந்தனர். அங்கே இவர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் 3 பக்க கடிதம் எழுதி வைத்து இந்த சகோதரிகள் இன்று தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் தற்கொலை சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரிகளின் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரிக்கையில், தற்கொலை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தங்கள் தற்கொலைக்கு காரணம் நீரஜ் சிங்கால், தாராசந்த், நீரஜின் தந்தை மற்றும் குவாலியரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வசிக்கும் பூனம் ஆகிய 4 பேர் தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு, நீரஜ் அவர்கள் இருவரையும் பாதுகாப்பதாகவும், நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அவர் தங்களுடன் பேசுவதையே நிறுத்தி கொண்டதாக அந்த கடிதத்தில் குறிப்பட்டுள்ள ஏக்தா, ஆசிரமத்தின் பெயரில் இந்த 4 பேரும் மக்களிடம் மோசடி செய்ததாக கூறினார். மேலும் அந்த பணத்தில் அந்த கும்பல் ஒரு பிளாட் வாங்கியதாகவும், பலர் தற்கொலை செய்துகொண்டதை மறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தற்கொலை குறிப்பை தாங்கள் தற்கொலை செய்துகொள்ளும் முன், ஆசிரமத்தின் வாட்ஸப் குழுவிலும், தங்கள் குடும்பத்தினரும் இந்த சகோதரிகள் பகிர்ந்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரித்ததில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் ஆக்ராவின் வெளியே இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், அதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடிதம் எழுதி வைத்து 2 சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!