India
ஆதார் - பான் இணைப்பு : 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழப்பு.. RTI மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி!
மோடி தலைமையிலான ஓன்றிய அரசு தனிமனித அடையாளம் என கூறி ஆதாரை கொண்டுவந்து, அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கியது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஓன்றிய அரசு அறிக்கை வெளியிட்டது. ஓன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசத்தை ஓன்றிய அரசு நீட்டித்தது.
புதிய பான் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தின் போது ஆதார்-பான் இணைப்பு தானாகவே செய்யப்படுகிறது. ஆனால் 2017-ம் ஆண்டோ அல்லது அதற்கு முன்போ PAN ஒதுக்கப்பட்ட, ஏற்கனவே PAN வைத்திருப்பவர்களுக்கு, PAN மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயம். எனவே பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து, பொதுமக்களின் நலன் கருதி ஒன்றிய அரசு கால அவகசாத்தை நீட்டித்தது.
தொடர்ந்து கால அவகாசம் நீட்டித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இதற்கான கெடு நிறைவடைந்தது. இந்த சூழலில் ஆதாருடன் பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் ஆதார் - பான் எண்கள் இணைப்பு குறித்த விவரங்களை கேட்டு தாக்கல் செய்தார். அவருக்கு RTI தகவல் தெரிவித்துள்ளது. அதில் பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதாவது இந்தியாவில் பான் கார்டு வைத்திருப்பவர்கள் சுமார் 70.24 கோடி பேர் உள்ளனர். அவர்களில் 57.25 கோடி பேர் பான் கார்டுகளை ஆதாருடன் இணைத்துள்ளனர். 12 கோடிக்கும் அதிகமான பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. அதில் 11.5 கோடி கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பான் கார்டை மீண்டும் செயல்படுத்த, ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று CBDT (Central Board of Direct Taxes) ஒன்றிய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதோடு தங்கள் பான் கார்டு ஆக்டிவில் உள்ளதா என்று பரிசோதித்து வருகின்றனர்.
அதோடு புதிய பான் கார்டைப் பெறுவதற்கு சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து ரூ.91 மட்டுமே ஆகும். ஆனால் பான் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு எப்படி 10 மடங்கு அபராதத்தை அரசு விதிக்க முடியும்?. அதுமட்டுமின்றி பான் கார்டு செயலிழக்கச் செய்யப்பட்டவர்கள் எப்படி வருமான வரி தாக்கல் செய்வார்கள்?. எனவே அரசு பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கால வரம்புகளை மறுபரிசீலனை செய்து நீட்டிக்க வேண்டும் என்று RTI தாக்கல் செய்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!