India
பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் - குடும்பத்தில் நடந்த கொடூர கொலை : குஜராத்தில் அதிர்ச்சி!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தை அடுத்த ஷாலிமார்ஷா கிராமத்தைச் சேர்ந்தவர் அஹேஜாஸ்கான். இவர் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி குரேஷாபானு. இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் கணவன் அஹேஜாஸ்கானுக்கு சரியான வேலை இல்லாததால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குடும்பம் நடத்துவதிலும் பிரச்சனைகள் எழுந்து வந்துள்ளது.
இதையடுத்து சம்பவத்தன்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் ஆட்டோவில் இருந்த ஸ்க்ரூ ட்ரைவர் ஒன்றை எடுத்து மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார்.
அப்போது இதைப்பார்த்த அவரது குழந்தைகள் அலறியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்த போது குரேஷாபானு ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். அவரை அருகே இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியைக் கொலை செய்த அஹேஜாஸ்கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான வேலை இல்லாததால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!