India
ஒடிசா :5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி !
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினரோடு வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்.
வந்தவர் சிறுமி தனியாக இருப்பதாய் அறிந்து அவருக்கு சாக்கலேட் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் சென்றவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு தன்னை காட்டுக்கொடுத்துவிடுவார் என அவர் அஞ்சியுள்ளார்.
இதன் காரணமாக அங்கிருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் சிறுமியை காணாமல் தேடியுள்ளனர். பின்னர் கட்டிலுக்கு அடியில் ரத்தவெள்ளத்தில் சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், அங்கிருந்த கடையின் உரிமையாளர் சிறுமியை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் அழைத்து சென்றதை பார்த்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலிஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!