India
மர்மமாக கிடந்த சாக்குமூட்டை : போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பிரேத பரிசோதனையில் பகீர் தகவல் !
மும்பை வடாலாவ் என்ற பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சாக்கு மூட்டை ஒன்று நீண்ட நேரம் கிடந்துள்ளது. இதை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் சாக்குமூட்டையை போலீசார் திறந்துபார்த்தபோது பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்துள்ளது. அந்த சாக்கு மூட்டையில், பெண் ஒருவரின் சடலம் பல துண்டுகளாக வெட்டுப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும் அந்த பெண்ணின் உடை முழுவதுமாக எரிக்கப்பட்டிருந்தது.
இந்த சடலத்தை போலிஸார் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகம் அடையாளம் தெரியாத அளவு சிதைக்கப்பட்டுள்ளது யாரும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, பெண்ணின் உடலில் தங்க கம்மல், மோதிரம், வளையல் அப்படியே இருந்ததாகவும், பெண்ணின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மும்பையில் காணாமல் போன பெண்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?