India
காதலித்த மகள் - அடித்தே கொன்ற கொடூர தந்தை : பெங்களூருவை அதிர வைத்த ஆணவக்கொலை!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த எச்.டி.கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் பல்லவி. இவர் அருகே உள்ள பள்ளியில் படித்து வந்தார். மேலும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்துள்ளார். இது பற்றி அறிந்த அவரது பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர்.
இருந்தாலும், அவர் தனது காதலை கைவிடவில்லை. இதையடுத்து தனது காதலனுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் மகளை கணேஷ் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளார். அப்போது உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது.
அங்குச் சென்ற கணேஷ் மகளைப் பார்த்த உடனே சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அங்கிருந்த கட்டை ஒன்றை எடுத்து தலையில் அடித்ததில் பல்லவி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பல்லவி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகள் காதலித்ததால் அவரை ஆணவக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் தந்தை கணேஷை போலிஸார் தேடி வருகின்றனர். காதலித்ததால் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!