India
அப்போ 80 கர்ப்பிணி பெண்கள்.. இப்போ சிறுவர்கள்.. தொடர்ந்து உ.பி அரசு மருத்துவமனையால் பரவும் HIV !
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் அமைந்துள்ளது லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கு நாள்தோறும் நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்வர். குறிப்பாக அந்த பகுதியை சுற்றியுள்ள கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் என பலரும் வந்து சிகிச்சை பெற்று செல்வர். அந்த வகையில் அண்மையில் சில சுமார் 180-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கே சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்கள் தலசீமியா என்று சொல்லப்படும் இரத்த மரபணு குறைபாடு பிரச்னை காரணமாக வந்துள்ளனர். எனவே இவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இரத்தம் ஏற்றப்பட்டுள்ள சிறுவர்களில் சிலருக்கு தற்போது HIV தொற்று பரவியுள்ளது. இந்த நிகழ்வு அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹெபாட்டிட்டிஸ் நோயும் ஏற்பட்டுள்ளது.
அதாவது இரத்தம் ஏற்றப்பட்டவர்களில் 14 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 சிறுவர்களுக்கு HIV தொற்றும், 7 பேருக்கு ஹெபாட்டிட்டிஸ் (Hepatitis) பி-யும், 5 பேருக்கு ஹெபாட்டிட்டிஸ் சி-யும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் இவ்வாறு கவன குறைவாக இருப்பது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியின் படி, சுமார் 16 மாத காலமாக இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மற்றும் பிரசவித்த கர்ப்பிணி பெண்கள் 80 பெருக்கு HIV தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது 2022-23 ஆண்டிலேயே இந்த மருத்துவமனையில் அதிக HIV நோய் இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாஜக ஆளும் மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் இவ்வாறு நடப்பது பெரும் கண்டனத்திற்குரியது என்று கண்டனம் வலுத்தது. ஆனால் தற்போது மீண்டும் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்களுக்கு HIV மற்றும் ஹெபாட்டிட்டிஸ் நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலசீமியா (Thalassemia) என்பது இரத்த சிவப்பணுக்களின் முக்கிய அங்கமான ஹீமோகுளோபினை போதுமான அளவு உடல் உற்பத்தி செய்யாதபோது ஏற்படும் பாதிப்பாகும். இது ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். இதற்கு இரத்தமாற்றம் மற்றும் செலேஷன் சிகிச்சை மட்டுமே செய்யமுடியும் என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!