India
திடீரென மூளைச்சாவடைந்த பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை : உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரால் நெகிழ்ச்சி !
குஜராத் மாநிலம் சூரத்தில் அமைந்துள்ளது மதினா என்ற பகுதி. இங்கு சேட்டன்பென் சங்கனி - ஹர்ஷ்பாய் என்ற தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில், சேட்டன்பென் சங்கனி சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். இந்த சூழலில் கடந்த அக். 13 அன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் பிறந்த அந்த குழந்தைற்கு எந்த வித அசைவும் இல்லை. இதனால் பயந்துபோன மருத்துவர்கள் சில நேரம், வென்டிலேட்டரில் வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அசைவு, அழுகை என எதுவும் இல்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும் ஏற்படவில்லை. இதையடுத்து குடும்பத்தினரிடம் அந்த குழந்தை மூளைச்சாவடைந்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிறந்து வெறும் 4 நாட்களில் பச்சிளம் குழந்தை இறந்துபோன செய்தி கேட்டு பெற்றோர் துடிதுடித்து போனர். இதையடுத்தே தங்கள் குழந்தை வாழவில்லை என்றாலும், அதன் மூலம் பிறர் வாழட்டும் என்ற எண்ணத்தில் இறந்து போன பச்சிளம் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் 2 கிட்னி, கல்லீரல், கண்கள் உள்ளிட்டவை தானம் செய்யப்பட்டது.
இதில் 2 கிட்னி, அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 8 மாதக் குழந்தைக்கும், கல்லீரல் புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 மாதக் குழந்தைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உறுப்புகளின் மூலம் மொத்தம் 6 பேருக்கு வாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை திடீரென மூளைச்சாவடைந்ததால், அந்த குழந்தையின் உடல் உறுப்பை குடும்பத்தினர் தானம் செய்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த நிகழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
Also Read
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க!’ : த.வெ.க.வை விமர்சித்த முரசொலி தலையங்கம்!