India
”மத்திய பிரதேச பா.ஜ.க ஆட்சியில் 1.5 லட்சம் இளம் பெண்கள் மாயம்” : பிரியங்கா காந்தி பகீர் குற்றச்சாட்டு!
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்குத் தேர்தல் தேதியை அண்மையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் டிச3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை எப்படியாவது வீழ்த்தித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தலைச் சந்திப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறது. ஆனால் 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மண்டலா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த ஒருவர், தேர்தல் நெருங்கும் போது பழங்குடியின மக்களுக்குச் செருப்பு மற்றும் குடைகளை விநியோகிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? கடந்த 18 ஆண்டுகளாக அவர் என்ன செய்து வருகிறார்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்திய பிரதேச பா.ஜ.க ஆட்சியில் 1.5 லட்சம் இளம் பெண்கள் மாயமாகியுள்ளனர். தினமும் 17 பாலியல் சம்பவங்கள் நடக்கிறது. குற்றச்சம்பவங்களில் மத்திய பிரதேசம் முன்னிலையில் உள்ளது." என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முழு விவரம் உள்ளே!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!