India

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய ABVP அமைப்பினர் : பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத்தில் அராஜகம்!

குஜராத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார்.குஜராத்தில் 22 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சியில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் சிறுபான்மை மக்கள் மீது அச்சுறுத்தலை இந்துத்துவா கும்பல் வெளிப்படையாகவே ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பன்முகத்தன்மைகள் குறித்த வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென பள்ளிக்குள் புகுந்த ABVP அமைப்பினர் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இவர்கள் மீது குஜராத் பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கலோரெக்ஸ் பியூச்சர் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் நேரடி விசாரணை மேற்கொண்டது. பள்ளி முதல்வர் நிராலி டாக்லி,” மாணவர்களிடம் எவ்வித மதப் பழக்கவழக்கங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்தவில்லை” என விளக்கம் அளிக்க வைத்துள்ளது.

இச்சம்பவம் குஜராத் முதல்வராக உள்ள பூபேந்திர படேலின் சொந்த சட்ட மன்றத் தொகுதியான கட்லோடியாவில் நிகழ்ந்தது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பூபேந்திர படேல் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு அவசியமில்லை” : அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!