India

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்-லாரி.. 7 பேர் துடிதுடித்து பலி.. கோயிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் !

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹோஸ்பேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் பிமலிங்கப்பா. இவர் தனது குடும்பத்துடன் குலஹல்லி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு தனது குடும்பத்துடன் செல்ல நினைத்துள்ளார். அதன்படி நேற்று குடும்பத்துடன் காரில் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கே சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மீண்டும் அதே காரில் ஊர் திரும்பியுள்ளார்.

அப்போது அவர் வந்த கார், வியாஸ்நகரே இரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பிமலிங்கப்பா குடும்பத்துடன் வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் கவிழ்ந்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.

இதையடுத்து இந்த விபத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ், போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த கோர விபத்தில் காரில் இருந்த 7 பேர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அதில் 2வயது சிறுவன் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிறுவன், லாரி ஓட்டுநர்கள் பழனிசாமி, ராஜேஷ் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மம்மியாக்கப்பட்ட கைதி.. 128 ஆண்டுகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்ட உடல்.. மக்கள் வியப்பு.. காரணம் என்ன ?