India
அரசு வேலை வாங்கி தருவதாக மாணவிகளிடம் பண மோசடி.. பா.ஜ.க பிரமுகருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
புதுச்சேரி மணவெளி தொகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரும், பா.ஜ.க பிரமுகருமாவார். இவர் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக நர்சிங் படித்த 10 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பல லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார்.
மேலும், இப்பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், அமைச்சர் நமச்சிவாயத்திடம் சொல்லிப் பணி மாறுதல்கள் பெற்றுத் தருவதாகவும் கூறி அவர்களிடம் பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி எதுவும் செய்யவில்லை. இது குறித்து அவர்கள் கேட்டபோது பதில் எதுவும் சொல்லாமல் நாட்களைக் கடத்தி வந்துள்ளார்.
அதோடு இவர்களிடம் வாங்கிய பணத்தில் சொகுசு வாழ்க்கையை விக்கி வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாளுக்குப் பல லட்சம் செலவு செய்து புதுச்சேரி முழுவதும் பேனர்களை வைத்துக் கொண்டாடியுள்ளார்.
இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பணத்தை இழந்தவர்கள் விக்கியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இவரைத் தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலிஸார் பா.ஜ.க பிரமுகர் விக்கியின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பொதுமக்களைக் காக்க வேண்டிய போலீசாரும் அச்சத்தில் வாழ்கிறார்கள்! : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
தேவையற்ற காரணங்களைக் கூறி குரியன் குழு கலைப்பு! : த.வெ.க அரசுக்கு ‘தி இந்து’ நாளேடு கண்டனம்!
-
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயப் பணியிட மாற்றம்... டாஸ்மாக் ஊழியர்களை பழிவாங்க துடிக்கும் த.வெ.க அரசு!
-
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம்! : முழு விவரம் உள்ளே!
-
தூத்துக்குடியில் மீனவர் உயிரி*ப்பு... த.வெ.க.வின் அலட்சியத்தால் நடந்த அவலம்!: கனிமொழி எம்.பி கண்டனம்!