India
”2024 தேர்தல் காந்திக்கும் கோட்சேவுக்குமான தேர்தல்” .. ராகுல் காந்தி MP அதிரடி பேச்சு!
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் 18 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் அம்மாநிலத்திற்கு எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
இது எல்லாம் சேர்ந்து பா.ஜ.க மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் கூறி வருகிறது. இதனால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான தேர்தல் என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சாஜாபூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.இதில், ராகுல் காந்தி எம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தன்னை ஓ.பி.சி பிரிவினரின் தலைவர் என்று காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஏன் ஓ.பி.சி பிரிவினரைச் சேர்க்கவில்லை?. ஓ.பி.சி சமூகத்திற்கு எதிரான அரசாகவே பா.ஜ.க உள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவந்து விட்டதாகா பா.ஜ.க சொல்கிறது. ஆனால் இதை சட்டமாக நிறைவேற்ற இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது மகாத்மா காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையேயான தேர்தல். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான தேர்தல்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!